விஷாலுக்கு கை நடுங்குவது ஏன்? - மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
விஷாலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
விஷால்
செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷால். அதன் பிறகு சண்டக்கோழி, தாமிரபரணி என பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
தற்போது விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக உள்ளார். சுந்தர் சி இயக்கத்தில், விஷால், அஞ்சலி என பல நடிகர்கள் நடிப்பில் மத கஜ ராஜா படம் உருவானது.
மத கஜ ராஜா
2013 ஆம் ஆண்டு வெளியாக வேண்டிய இந்த படம் பல்வேறு காரணங்களால் தடைபட்டு தற்போது 12 ஆண்டுகள் கழித்து வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் PRE RELEASE EVENT நேற்று(05.01.2025) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநர் சுந்தர் சி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் நடிகர் விஷால் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் விஷால் பேசும் போது வழக்கத்திற்கு மாறாக அவரது கை நடுங்கியதோடு, அவரது பேச்சிலும் தடுமாற்றம் இருந்தது.
உடல்நிலை
இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியான நிலையில், விஷாலின் நிலையை பார்த்து கவலையும் அதிர்ச்சியுமடைந்த ரசிகர்கள் விஷாலுக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பினார்கள்.
இதனையடுத்து விஷால் கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.