13 மணி நேர சோதனை..? ED அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சம்மன் - நடந்தது என்ன?
ED அதிகாரி லஞ்ச கைதான நிலையில், அது தொடர்பான தகவல்கள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ED அதிகாரி
கைது திண்டுக்கல்லில் அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை துறை அங்கித் திவாரி கைதாகி இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
அவர் மீது பதியப்பட்டுள்ள FIR'இல் இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது என்றும், இது தவிர அங்கித் திவாரி, மருத்துவர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
சோதனையில் நடந்தது என்ன..?
இந்த சம்பவங்களை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனைக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் மறுத்தபோது அவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தி அலுவலகத்தில் சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்கித் திவாரி சம்மந்தமான பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
சோதனையின்போது அங்கித் திவாரி அமலாக்கத் துறையின் பெயரில் யாரையும் மிரட்டியோ, அச்சுறுத்தியோ கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளாரா? என்ற கோணத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். மேலும், அவருக்கு தொடர்புடைய மற்ற அதிகாரிகள் தொடர்பாகவும் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.