ஜெய் பீம் பட பாணியில் மரணம் , LOCKUP - ல் வைத்து அடித்து கொன்ற போலீஸ் ?

By Irumporai Jun 01, 2022 02:57 PM GMT
Report

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகேயுள்ள தட்டரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர், அந்தப் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டுவருவதாகக் கூறி, கடந்த மாதம் 26-ம் தேதியன்று திருவண்ணாமலை கலால் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார் தங்கமணி. இந்நிலையில், 27-ம் தேதி அன்று காலை தங்கமணிக்கு வலிப்பு வந்ததாக காவல்துறை அதிகாரிகளால் கூறப்படுகிறது.

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தங்கமணி, சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். பின்பு, மாலை 4 மணி அளவில் மீண்டும் வலிப்பு ஏற்பட்டதாகவும் இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், இரவு சுமார் 8 மணியளவில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவல், தங்கமணியின் குடும்பத்தாருக்குச் சென்றுள்ளது. தகவலைக் கேட்டு அதிர்ந்துபோன தங்கமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், காவல்துறையினர் பொய் வழக்கு பதிந்தே தங்கமணியைச் சிறையிலடைத்ததாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

கடந்த நான்கு வருடங்களில் இந்தியாவில் நடக்கும் சிறை மரணங்களில் தமிழகமும் உள்ளது என கூறுகின்றன ஆய்வுகள், அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான ஜெய் பீம் படத்தை பார்த்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து கூறுகையில் :

தானும் மிசா காலத்தில் இது போன்ற துயரங்களை அனுபவித்தாக கூறினார் இனி தான் ஆட்சியில் இருக்கும் வரை இது போன்ற கொடூர மரணங்கள் எதுவும் நிகழாது எனக் கூறினார்.

ஆனால்  தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்று 1 ஆண்டுகளில் இரண்டு சிறை மரணங்கள் ஏற்பட்டிருப்பது தமிழக அரசின் மீதும் காவல் துறை மீதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது அதிகரிக்கும் லாக் அப் மரணங்களுக்கு காரணம் என்ன விளக்குகின்றது இந்த செய்தி தொகுப்பு .

[