கண்களுக்குக் கீழே வீக்கம்..சிறையில் நடந்த சம்பவம் -கதறும் நடிகை ரன்யா ராவ்!
நடிகை ரன்யா ராவ் கண்களுக்குக் கீழே வீக்கம் மற்றும் காயங்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ரன்யா ராவ்
கன்னடம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்த நடிகை ரன்யா ராவ், கடந்த சில தினங்களுக்கு முன் துபாயிலிருந்து பெங்களூருக்கு வந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது தனது உடலில் அதிகப்படியான நகையை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து காவல்துறையினர் சோதனை நடத்தியதில் 4.2 கிலோ தங்கக் கட்டிகள், மற்றும் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.2 கோடியே 67 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
காயங்கள்
பின்னர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.இந்த நிலையில் நடிகை ரன்யா ராவ் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படும்போது, அவருடைய கண்களுக்குக் கீழே வீக்கம் மற்றும் அவரது உடலில் காயங்கள் இருந்தது.
இதனையடுத்து நடிகை ரன்யா ராவ் வேண்டிய மருத்துவ உதவிகளைச் செய்யும்படி சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் விசாரணையின்போது அதிகாரிகளிடம், முடிந்த வரை இந்த வழக்கு விசாரணை விவரங்கள் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.