IND vs SA Final: 2 நாட்களுக்கு மழை தான் - போட்டி ரத்தானால் கோப்பை எந்த அணிக்கு?

Cricket India South Africa Sports T20 World Cup 2024
By Jiyath Jun 29, 2024 10:53 AM GMT
Report

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டில் இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் இன்று மோதவுள்ளன. 

உலகக்கோப்பை 

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தானி அரையிறுதியில் வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணியும், இங்கிலாந்தை அரையிறுதியில் வீழ்த்திய இந்திய அணியும் மோதவுள்ளன.

IND vs SA Final: 2 நாட்களுக்கு மழை தான் - போட்டி ரத்தானால் கோப்பை எந்த அணிக்கு? | What Happen Ind Vs Sa Final Cancel Due To Rain

இந்த போட்டியானது வெஸ்ட் இன்டீஸின் பிரிட்ஜ்டவுனிலுள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஆனால், கரீபியன் தீவுகளில் தற்போது மழைக்காலம் தொடங்கியிருப்பதால் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மழை பெய்தால்.. 

மேலும், இன்று ஜூன் 29 மற்றும் நாளை ரிசர்வ் நாள் ஜூன் 30 ஆகிய 2 நாட்களும் பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் மழைக்கு அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

IND vs SA Final: 2 நாட்களுக்கு மழை தான் - போட்டி ரத்தானால் கோப்பை எந்த அணிக்கு? | What Happen Ind Vs Sa Final Cancel Due To Rain

இந்நிலையில் ஒருவேளை இன்று போட்டி நடக்கவில்லை என்றாலும், ரிசர்வ் நாளான நாளை போட்டி நடத்தப்படும். ஆனால், நாளையும் மழை குறுக்கிட்டு போட்டி ரத்து செய்யப்பட்டால் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு, கோப்பை 2 அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.