தண்ணீர் தரமுடியாது என தடாலடியாக சொன்ன கர்நாடகா..என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசு கூறியுள்ளது.
இழுத்தடிக்கும் கர்நாடகா
போதுமான நீர் இல்லை என்ற காரணத்தை கூறி, கர்நாடக அரசு தமிழகத்திற்கு அளிக்கவேண்டிய நீரை தராமல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக தமிழக அரசும், தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
தமிழகத்திற்கு 5000 கனஅடி நீர் அடுத்த 15 நாட்களுக்கு திறந்து விடப்படும் என காவிரி ஒழுங்காற்று வாரியம் தெரிவித்துள்ள நிலையில், அதனை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளது. இந்த சூழலில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா கலந்து கொண்டார்.
தண்ணீர் திறந்து விட முடியாது
அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு 24 ஆயிரம் கன அடி நீர் தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த கூட்டத்தில் கர்நாடாகா அரசு தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிடவே முடியாது என்று கூறியுள்ளது.
கர்நாடகாவில் வெறும் 47 சதவீத தண்ணீர் மட்டும் இருப்பதாலும், மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாலும் தண்ணீர் திறந்துவிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், கர்நாடகாவின் . நான்கு அணைகளில் போதுமான அளவு நீர் இல்லை என்ற காரணத்தால் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5000 கன அடி நீர் திறந்து விடப்படும் என காவிரி மேலாண்மை ஆணைய குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.