சிறுநீரை குடிக்கும் விண்வெளி வீரர்கள் : வெளியான ஆச்சர்ய தகவல்
பூமியில் இருந்து விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு குடி நீர் எவ்வாறு கிடைக்கின்றது என்ற தகவலை நாசா வெளியிட்டுள்ளது.
நாசா
நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உள்ளது அமெரிக்கா. ஏற்கெனவே சர்வதேச விண்வெளி நிலையங்களுக்கு விண்வெளிவீரர்கள் போய்வருகின்றனர் என்றாலும் நிலவுக்கு மனிதர்கள் செல்வது இதுதான் இரண்டாவது முறை என கூறுகின்றது அமெரிக்கா இந்த நிலையில், விண்வெளி வீரர்கள் விண்வெளியில் என்ன உணவு சாப்பிடுகின்றனர் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தரையுடன் சேர்த்துப் பொருத்தப்பட்ட மேசையும் நாற்காலிகளும் இருக்கும். இதில் அமரும் போது சாதாரணமாக சாப்பிடுவது போலத் தோன்றும். அங்கு விண்வெளிக்கென தயாரிக்கப்பட்ட தட்டும் ஸ்பூன்களும் இருக்கும். பெரும்பாலும் உதிர்ந்து சிதறாத உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் உணவுத்துணுக்குகள் மிதக்கத் தொடங்கிவிடும்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இருப்பதனால் அவர்கள் பள்ளி குழந்தைகள் போல உணவை பகிர்ந்துகொள்வார்களாம். மிதக்கும் உணவுகளை வீசி வாயால் கேட்ச் பிடித்து சாப்பிடுவது வேடிக்கையாக இருக்குமாம். உணவு கெட்டுப்போய்விடக் கூடாது மற்றும் பாக்டீரியாக்கள் உருவாகிவிடக் கூடாது ஆகிய இரண்டு விஷயங்களைக் கருத்திக்கொண்டு உணவுகள் அனுப்பப்படுகின்றன.

சிறுநீர் குடிநீராக
அவ்வப்போது பழங்களும் விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படும். குளிரூட்டப்பட்டாலும் இவற்றை நீண்ட நாட்களுக்கு வைத்து சாப்பிட முடியாது என கூறப்படுகின்றது சிறுநீர் குடிநீராக குறிப்பாக மனிதனுக்கு முக்கியமாக தேவைப்படுவது நீர் இது விண்வெளியில் எவ்வறு கிடைக்கின்றது எனபதை பார்த்தால் உங்களுக்கு வியப்பினை கொடுக்கலாம்.

பூமியிலிருந்து கிளம்பும்போதே விண்வெளி வீரர்கள் தங்களுடன் கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு செல்வார்கள். மீதி தண்ணீர் மறு சுழற்சி மூலமாக கிடைக்கும்.
விண்கலத்தின் எரிபொருள் செல்களில் இருந்து வரும் கழிவு நீர், ஈரப்பதம், சிறுநீர் ஆகியவை தண்ணீருக்கான மூல இது உங்களுக்கு அருவருப்பாகத் தோன்றலாம். நம்மில் பெரும்பாலானவர்கள் பூமியில் அருந்தும் தண்ணீரைவிட இங்கே வடிகட்டி வழங்கப்படும் தண்ணீர் தூய்மையானது என்கிறது நாசா.