ஆதார் முதல் பாஸ்போர்ட் வரை.., இன்று முதல் அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்
ஒவ்வொரு மாதமும் போல, ஜூலை 1 முதல் பல புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி, ஆதார், பாஸ்போர்ட், வாகன விலை மற்றும் கிரெடிட் கார்டு விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆதார்
யூஐடிஏஐ இணையதளத்தில் ஆதார் எண்ணுடன் இ-மெயில் முகவரியை இணைக்க இதுவரை ரூ.75 கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், இன்று முதல் டிசம்பர் 31 வரை இந்த சேவையை இலவசமாக பயன்படுத்தலாம்.
வாகனங்கள்
சில கார் மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்கள், பல்வேறு மாடல்களின் விலையை 1.5% முதல் 3% வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளன.

கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டுகளில் சில பரிவர்த்தனைகள் வெகுமதி புள்ளிகளின் (ரிவார்ட்) வகையில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.
சில கிரெடிட் கார்டுதாரர்களுக்கு சில வங்கிகள் உள்நாட்டு விமான நிலைய லவுஞ்ச் வசதியை இலவசமாக வழங்குகின்றன.
ஆனால், அதற்கு ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்தது ரூ.60,000 செலவு செய்திருக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட்
பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் ரூ.1,500ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், தட்கல் பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் ரூ.3,500ல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan