சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன?

Symptoms Diabetes SugarPatient நீரிழிவுநோய் சர்க்கரைநோய் அறிகுறிகள்என்ன? அறிகுறிகள்
By Thahir Mar 27, 2022 12:34 AM GMT
Report

நம்மில் பலருக்கு சர்க்கரை நோய் இருக்குமோ என்றோ அல்லது அவர்களுக்கு இருக்கும் அறிகுறிகளில் ஒன்று சர்க்கரை நோயாக இருக்குமோ என்றோ பலவித சந்தேகங்கள் இருக்கும்.

அதிக தாகம், அதிக பசி மற்றும் அதிகமாக சிறுநீர் கழித்தல்.

குறிப்பாக இரவில் அதிகமாக சிறுநீர் கழித்தல். இரவில் இரண்டு முறை அல்லது அதற்கு மேலாக சிறுநீர் கழித்தல்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறுவதற்கு என்ன காரணம் என்றால் உடலில் இரத்தத்தில் அதிகமாக சர்க்கரை இருக்கும். இதனால் உடலில் இரத்தத்தில் அதிகமாக உள்ள சர்க்கரையை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

திடீரென உடல் எடை சடுதியாக குறைதல்.

கால் பாகங்களில் குத்தல், எரிச்சல் போன்றவை இருத்தல்.

உடல் சோர்வு, உடல் அசதி மற்றும் கண்பார்வை மங்குதல் போன்ற காரணிகளும் சர்க்கரை நோய்க்கான ஒரு காரணியாக இருக்கின்றது.

சர்க்கரை நோயின் இன்னுமொரு அறிகுறியாக அதிகமான இனிப்பு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு காணப்படும்.