சீன உளவு கப்பலால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா ? அந்த கப்பலில் என்ன இருக்கிறது ?

Sri Lanka China
By Irumporai Aug 16, 2022 05:34 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டா துறைமுகத்தில் சீன உளவு கப்பல் தற்போது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இலங்கை வந்துள்ள சீன உளவுகப்பலான யுவான் வாங் - 5 ஏன் இந்தியாவுக்கு தலை வலியாக பார்க்கப்படுகிறது அந்த கப்பலில் அப்படி என்ன இருக்கிறது, வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

சீன உளவு கப்பல்

சீனா கடந்த 1980 ஆம் ஆண்டு யுவான் வாங் என்ற உளவு கப்பலை உருவாகியது. அதன் பிறகு 1986 -ல் இரண்டாம் தலைமுறை உளவுகப்பலையும் தற்போது அதி நவீன மூன்றாம் தலைமுறை உளவு கப்பலான யுவான் வாங் 5 ஐ உருவாக்கியுள்ளது.

சீன உளவு கப்பலால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா ? அந்த கப்பலில் என்ன இருக்கிறது ? | What Are The Special In Chinese Spy Ship

இந்த கப்பல்தான் தற்போது இலங்கையில் துறைமுகத்திற்கு வந்துள்ளது. 222 மீட்டர் நீளமும் 25 புள்ளி 2 மீட்டர் அகலமுள்ள இந்த கப்பல் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த யுவான் கப்பல் நேரடியாக செயற்க்கை கோளுடன் இணைப்பில் இருக்கும் .

அதோடு இந்த கப்பலின் மூலம் சுமார் 750 கிலோமீட்டர் வரை உளவு பார்க்க முடியும் . அதாவது தற்போது இலங்கையில் இருந்த படியே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா வரை உள்ள நிலப்பரப்புகளை சீன கப்பல் உளவு பார்க்க முடியும்.

இந்தியாவை குறி வைக்கும் சீனா

குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அனுமின் நிலையம் மற்றும் ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளம் போன்றவை முழுமையாக உளவு பார்க்க முடியும். இதனால் நம் நாட்டின் பாதுகாப்பு ரகசியங்கள் சீனாவிடம் செல்லும் அபாயம் எழுந்துள்ளது.

சீன உளவு கப்பலால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா ? அந்த கப்பலில் என்ன இருக்கிறது ? | What Are The Special In Chinese Spy Ship

தற்போது இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்தில் உள்ள இலங்கை கப்பல் அடுத்த ஒரு வாரத்திற்கு நிறுத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

முதலில் சீன கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அரசு அனுமதி கொடுக்கவில்லை, பின்னர் சீன அரசு கொடுத்த கடும் அழுத்தம் காரணமாக இலங்கை அரசு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.