திடீரென டிரெண்டாகும் மக்கானா., நன்மைகள் என்னென்ன?
மக்கானா என்பது தாமரை விதையிலிருந்து பெறப்படும் ஒரு பாரம்பரிய இந்திய சிற்றுண்டி ஆகும்.
இந்த தாமரை விதையான மக்கானா பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது.
அந்தவகையில், தற்போது அதிகம் பிரபலமாகி வரும் மக்கானாவில் உள்ள நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
கிடைக்கும் நன்மைகள்
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மக்கானாவில் உள்ள ஃப்ளாவனாய்ட்கள் வீக்கத்தை குறைக்கிறது மற்றும் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.
மக்கானாவில் தாவர அடிப்படையிலான உள்ள அதிக புரதச்சத்துக்கள் தசைகளை சரிசெய்ய உதவுகிறது மற்றும் ஆற்றலைக் கொடுக்கிறது.
மக்கானாவில் உள்ள குறைவான கலோரிகள், உடல் எடையை வெகுவாகக் குறைக்க உதவுகிறது. மக்கானாவில் உள்ள நார்ச்சத்துக்கள், செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
மேலும், மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் செரிமான மண்டலத்தை சிறப்பாக வைத்துக்கொள்கிறது.
மக்கானா கிளைசமிக் உணவுகள் பட்டியலில் உள்ளதால், ரத்த சர்க்கரை உயர்வைக் கட்டுப்படுத்துகிறது.
மக்கானாவில் இயற்கையிலேயே குளூட்டன் இல்லாததால், அது குளுட்டன் ஏற்புத்திறன் இல்லாதவர்களுக்கு ஏற்ற உணவாக அமைகிறது.
இந்த மக்கானாவில் கொலாஸ்ட்ரால் குறைவாகவும், மெக்னீசியச் சத்துக்கள் அதிகமும் உள்ளது. இது ரத்த அழுத்தத்தைத் முறைப்படுத்துகிறது.
மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதய நோய்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கிறது.
இதில் உள்ள தியாமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மூளையின் இயக்கத்தை அதிகரித்து நினைவாற்றலைப் பெருக்க உதவுகிறது.