உருளைக்கிழங்கு கண்டிப்பா சாப்பிடுங்க... இந்த 5 நன்மைகள் இருக்காம்! என்னென்ன தெரியுமா?
உருளைக்கிழங்கில் கலோரிகள் அதிகம் இருப்பதால் அதனை யாரும் அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், இதில் சில நன்மைகளும் உள்ளன. அதனை பற்றி இதில் பார்க்கலாம்.
என்னென்னெ நன்மைகள்
உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் எனப்படும் கார்போஹைட்ரேட் இருப்பதால் இதனை பலரும் சாப்பிட தவிர்ப்பார்கள். ஏனென்றால் இது கலோரி மற்றும் கொழுப்பை அதிகரிக்கும். ஆனால், இதனை சாப்பிட்டால் சில நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.
1. உருளைக்கிழங்கில் பொட்டாசியம் இருப்பதால் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. இதனை உட்கொண்டால் நமது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
2. பல ஊட்டச்சத்துக்கள் உருளைக்கிழங்கில் நிரம்பியுள்ளன. அதாவது வைட்டமின் சி, வைட்டமின் பி 6, நார்ச்சத்து மற்றும் ஆக்சிஜனேற்றிகள் ஆகியவை உள்ளன என்று கூறப்படுகிறது.
3. உருளைக்கிழங்கில் குறிப்பிட்ட அளவு நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை கட்டுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
4. உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
5. அதிக அளவில் கலோரி தேவைப்படுபவர்கள் இதனை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு நன்மை பயக்கும். இதனை உட்கொண்டால் கலோரி பற்றாக்குறையால் பாதிக்கப்படாமல் இருக்கலாம்.
இந்த செய்தி தகவல்கள் நோக்கங்களுக்காக மட்டுமே பதிவிடப்படுகிறது. துறை சார்ந்த வல்லுநர்களை கலந்து ஆலோசித்து கொள்வது அவசியம்.