வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜமைக்காவில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 110 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 302 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 51.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக கிருமா போனர் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அஃப்ரிதி 6, முகமது அப்பாஸ் 3, ஃபஹீம் அஷ்ரஃப் 1 விக்கெட் சாய்த்தனர். பின்னா் முதல் இன்னிங்ஸில் 152 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான், 27.2 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் அடித்து டிக்ளர் செய்தது.

அதிகபட்சமாக இம்ரான் பட் 5 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னா் 329 ரன்களை இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷாஹீன் அப்ரிதி அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் வென்ற நிலையில், இப்போது இரண்டாவது போட்டியை பாகிஸ்தான் வென்றுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : இன்று முதல் சாட்சியங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு IBC Tamil
பாசிக்கிடம் 250 மில்லியன் ரூபா லஞ்சம் கோரியுள்ள தேசபந்து! மீண்டும் சர்ச்சையில் விஜயதாச ராஜபக்ச IBC Tamil
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு IBC Tamil