மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியை தக்கவைக்கிறார்: வெளியான தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக்கணிப்பு
5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில் பல்வேறு தொலைக்காட்சிகள் மற்றும் கருத்து கணிப்பு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலுக்கான 8ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்தது.
மொத்தமாக தமிழகம் 234; அஸ்ஸாம் 126; கேரளா 140; புதுவை 30; மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மே 2ம் தேதி 5 மாநிலங்களுக்குமான சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இதையடுத்து இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன.
இதில் மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா பானர்ஜி அவர்களது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைப் பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவரம்
1. ரிபப்ளிக் - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு
திரிணாமுல் காங். + : 128-138 இடங்கள்.
பாஜக + : 138-148 இடங்கள்,
இடதுசாரிகள்+ ; 11-21 இடங்கள் பெறும் என கருத்துக்கணிப்பு வெளியிட்டன.
2. டைம்ஸ் நவ்- சி வோட்டர் கருத்துக்கணிப்பு
திரிணாமுல் காங். +: 152-164
பாஜக+: 109-121
காங்கிரஸ்+: 14-25
என டைம்ஸ் நவ்- சி வோட்டர் மற்றொரு கருத்துக்கணிப்பும் வெளியிட்டுள்ளன.