உலகக்கோப்பை தொடருக்கு கூட தகுதிபெறாத வெ.இ அணியிடம் இந்தியா தோல்வி - புலம்பும் ரசிகர்கள்!
இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றுள்ளது.
IND vs WI
இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் கூட முழுமையாக விளையாடாமல் 40.5 ஓவர்களில் 181 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதையடுத்து 182 ரன்கள் என்ற எளிய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
சொதப்பல்
ஹோப் அரைசதம் அடித்து அசத்தினார். கேப்டன் ஹோப் - கேசி கார்ட்டி கூட்டணி சேர்ந்தது. தொடக்கம் முதலே நிதானமாக ஆடினர். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்து அபார வெற்றியை பெற்றது.
இந்திய அணிக்கு எதிராக 9 ஒருநாள் போட்டிகளுக்கு பின் முதல்முறையாக வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில், உலகக்கோப்பைத் தொடருக்கு கூட தகுதிபெறாத வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா தோல்வியடைந்துள்ளது ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.