கிரிக்கெட் மைதானத்தில் திடீரென சுருண்டு விழுந்த வீராங்கனை - போட்டியின் போது அதிர்ச்சி

shamiliaconnel BANWvWIW shamiliaconnellcollapses
By Petchi Avudaiappan Mar 18, 2022 08:35 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

மகளிர் உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடரில் வீராங்கனை  மைதானத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

நியூசிலாந்து நாட்டில் கடந்த மார்ச் 4 ஆம் தேதியன்று துவங்கிய ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் மிகுந்த தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டி  தொடரில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மொதின. 

அதன்படி முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து வெறும் 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து பேட் செய்த வங்கதேசம் அணி ஆரம்பம் முதலே வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதன்மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.  இதனிடையே இந்த ஆட்டத்தின் 2 ஆம் பாதியில் வங்கதேச அணி 47வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீராங்கனை ஷமிலா கானெல் பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது லேசான வயிற்று வலியை உணர்ந்த அவர், +மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

இதனால்  மைதானத்தில் இருந்த அனைவரும் பதறி போன நிலையில்  உடனடியாக மைதானத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஷமிலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.