துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் - தங்கும் விடுதியில் அதிர்ச்சி சம்பவம்!

Cricket West Indies cricket team Sports
By Jiyath Feb 06, 2024 07:25 AM GMT
Report

வெஸ்ட் இண்டீஸ் வீரர் பாபியன் ஆலன் துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழிப்பறி 

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் 'பார்ல் ராயல்ஸ் அணிக்காக' வெஸ்ட் இண்டீஸ் வீரர் பாபியன் ஆலன் விளையாடி வருகிறார். அவர் ஜோகனஸ்பர்க்கில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்றபோது, சிலர் அவரை துப்பாக்கி முனையில் சிறைபிடித்து மறைவான இடத்திற்கு கொண்டு சென்றனர்.

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் - தங்கும் விடுதியில் அதிர்ச்சி சம்பவம்! | West Indies Player Fabian Allen Mugged Gunpoint

பின்னர் அவரிடம் இருந்து செல்போன், பணம், டைரி, பேக் போன்ற பொருட்களை வழிப்பறி செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்ட நிலையிலும், இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

66 வயதில் 28 வயது குறைந்த பெண்ணை மணந்த கிரிக்கெட் வீரர் - காதல் மலர்ந்தது எப்படி?

66 வயதில் 28 வயது குறைந்த பெண்ணை மணந்த கிரிக்கெட் வீரர் - காதல் மலர்ந்தது எப்படி?

காயம் ஏற்படவில்லை 

இதுகுறித்து தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் நிர்வாகமும், பார்ல் ராயல்ஸ் நிர்வாகமும் எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், தற்போது இது குறித்து தீவிர விசாரணையை நடத்தி, இந்த சம்பவம் நடைபெற்றது உண்மைதான் என அறிவித்துள்ளது.

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் - தங்கும் விடுதியில் அதிர்ச்சி சம்பவம்! | West Indies Player Fabian Allen Mugged Gunpoint

மேலும் இதுகுறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் "பாபியன் ஆலனுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. பொருட்களை மட்டுமே வழிப்பறி செய்துள்ளார்கள்" என்று தெரிவித்துள்ளார்.