டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் பெயர்கள் அறிவிப்பு
டி20 உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 7-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளப்போகும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் -
நிக்கோலஸ் பூரன் (கேட்ச்),
ரோவ்மேன் பவல்,
யானிக் கரியா,
ஜான்சன் சார்லஸ்,
ஷெல்டன் காட்ரெல்,
ஷிம்ரோன் ஹெட்மியர்,
ஜேசன் ஹோல்டர்,
கைல் மேயர்ஸ்,
ஓபேட் மெக்காய்,
ரெய்மோன்,
ரெய்மான் ஒடியன் ஸ்மித்.
அகேல் ஹொசைன்,
அல்சாரி ஜோசப்,
பிராண்டன் கிங்,
எவின் லூயிஸ்,
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியுடன் இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.