‘’ மெல்ல விடை கொடு விடை கொடு மனமே ‘’ - சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பிராவோ ஓய்வு
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ (38), ஐசிசி உலக கோப்பை டி20ல்லீக் ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
இலங்கை அணிக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தில் மண்ணைக் கவ்விய நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
இந்த தோல்வியை தொடர்ந்து தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் பிராவோ .
இதுவரை பிராவோ 40 டெஸ்டில் 2200 ரன் எடுத்துள்ளார் மற்றும் 86 விக்கெட் எடுத்துள்ளார். மேலும், 164 ஒருநாள் போட்டிகளில் 2968 ரன் (மற்றும் 199 விக்கெட்; 90 டி20 போட்டியில் 1245 ரன் (அதிகம் 66*, சராசரி 22.23, அரை சதம் 4) மற்றும் 78 விக்கெட் எடுத்துள்ளார் பிராவோ.
பிராவோ - ன் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.