டி20 உலகக்கோப்பை தொடர்: முரட்டுதனமான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
டி20 உலகக்கோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக இந்தாண்டுக்கான டி20 உலகக்கோப்பை திட்டமிட்டபடி இந்தியா சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.இதற்கான அனைத்து நாடுகளும் தங்கள் அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் மேற்கிந்திய தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பொல்லார்ட் தலைமையிலான அந்த அணியில் நிக்கோலஸ் பூரன், பேபியன் ஆலன், ட்வைன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஆண்ட்ரியூ ஃபவுட்சர், கிரிஸ் கெய்ல், சிம்ரன் ஹெய்ட்மர், ஈவின் லீவிஸ், ஓபட் மெக்காய், லிண்டல் சிம்மன்ஸ், ரவி ராம்பால், ஆண்ட்ரியூ ரசல், ஓஸ்னே தாமஸ், ஹெய்டன் வால்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீனியர் வீரரான சுனில் நரைனுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.