ஓடும் ரயிலிலிருந்து சக பயணியை தள்ளிவிட்ட நபர்... - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!

Viral Video West Bengal
By Nandhini Oct 17, 2022 10:38 AM GMT
Report

ஓடும் ரயிலிலிருந்து சக பயணியை தள்ளிவிட்ட நபரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் ரயிலிலிருந்து சக பயணியை தள்ளிவிட்ட நபர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மேற்கு வங்கத்தில் ஓடும் ரயிலிருந்து சகபயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நபர் திடீரென அந்தப் பயணியை ஓடும் ரயிலிலிருந்து தள்ளி விட்டார்.

இது குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் சக பயணியை தள்ளிவிட்ட நபரை உடனடியாக கைது செய்தனர்.

இதில், வெளியே தள்ளப்பட்ட பயணி அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

west-bengal-viral-video