பாஜக கொடியுடன் போலீசாரை கொடூரமாக தாக்கிய போராட்டக்காரர்கள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

BJP Viral Video West Bengal
By Nandhini Sep 14, 2022 04:59 AM GMT
Report

மேற்கு வங்காளத்தில் பாஜக கொடியுடன் போலீசாரை கொடூரமாக தாக்கிய போராட்டக்காரர்களின் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

பாஜகவினர் போராட்டம் 

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி அரசில் ஊழல் மலிந்து விட்டதாகவும், திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் பாஜக அறிவித்திருந்தது.

இதனையடுத்து இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல இடங்களிலிருநது நேற்று பாஜகவினர் குவியத்தொடங்கினர். இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். ஹவ்ரா பகுதியில் பாஜகவினர் பேரணியாக வந்தபோது அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக போலீசார் தடுப்புகள் அமைத்திருந்தனர்.

Protesters - police - viral video

காவலரை தாக்கிய போராட்டக்காரர்கள்

அதை மீறி பாஜகவினர் சென்றதால், கூட்டத்தினரை கலைப்பதற்காக, பேரணியாக வந்தவர்கள் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், கோபமடைந்த போராட்டக்காரர்கள் காவல் துறை வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்தினர். காவலர்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.

இதனால், அப்பகுதி கலவரமாக மாறியது. இந்த போராட்டத்தில் பாஜக கொடியுடன் காவலர் ஒருவரை போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டி தாக்கினர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.