பாஜகவின் அசைக்கமுடியாத சக்தி : வங்கத்து பெண் புலி அரசியலுக்கு வந்த கதை

By Irumporai Feb 16, 2023 09:28 AM GMT
Report

2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் வந்து கொண்டிருப்பதால், வீட்டிற்கு வெளியே ஆயிரக்கணக்கான திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே பரபரப்பு நிலவியது , ஆனால் மமதா பானர்ஜியின் முகம் மிகவும் அமைதியாக இருந்தது. காங்கிரஸிலிருந்து பிரிந்து ஒரு தனி கட்சியைத் தொடங்கி, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, இடதுசாரிகளை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறக் கூடிய வாய்ப்பு நெருங்கியது

 மம்தா அசியல்

அது வரை பல காலமாக காங்கிரஸ் மட்டுமே மேற்கு வங்கத்தில் அமைத்து வந்தது , சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் பொற்கால ஆட்சி என்று சொல்ல முடியாது 1990 ல் மேற்கு வங்கத்தில் டாடா நிறுவனத்தின் திட்டத்திற்காக மேற்கு வங்கத்தின் உள்ள சில பகுதிகள் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதனை எதிர்த்து களமிறங்கிய முக்கிய பெண் அரசியல் புலியாக மாறுவார் என அப்போது யாரும் எண்ணவில்லை மேற்கு வங்க அரசியலில் தனக்கான இடத்தை பிடிக்க மம்தா கடந்து வந்த்து பூபாதை அல்ல வலிகள் நிறைந்த முட் பாதைகளே

பாஜகவின் அசைக்கமுடியாத சக்தி : வங்கத்து பெண் புலி அரசியலுக்கு வந்த கதை | West Bengal Politics In Tamil

வலிகள் நிறைந்த முட் பாதைகள் 

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று மாநிலம் தழுவிய பந்தின் போது, காங்கிரஸின் உத்தரவின் பேரில், ஹாஜ்ரா மோடில், லாலு ஆலம் ஒரு கட்டையால் மமதாவின் தலையில் தாக்கினார். இதில், அவரது மண்டை உடைந்த போதிலும், தலையில் ஒரு கட்டுடன், அவர் மீண்டும் சாலையில் போராட்டத்தில் இறங்கினார். அப்போது அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறிப்னாலும் அவரது மனத்தைரியம் அவரை காப்பாற்றியது.

தோல்விகளே வெற்றி படி 

2006 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் , ஊடகங்கள் முதல் அரசியல் வட்டாரங்கள் வரை, மம்தாவின் கட்சி ஆட்சிக்கு வருவது உறுதி என்று கருதப்பட்டது.மம்தாவே கூட தனது இரண்டு விரல்களை உயர்த்தி, வெற்றிக் குறியை மதினிப்பூரில் பத்திரிகையாளர்களிடம் காட்டியிருந்தார். அடுத்த கூட்டம் ரைட்டர்ஸ் கட்டடத்தில் இருக்கும் என்றும் கூறினார். மமதா பானர்ஜியின் அரசியல் பயணம் 1976 ஆம் ஆண்டில் அவரது 21 வயதில் மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராகத் தொடங்கியது.

பாஜகவின் அசைக்கமுடியாத சக்தி : வங்கத்து பெண் புலி அரசியலுக்கு வந்த கதை | West Bengal Politics In Tamil

1984 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக, மம்தா தனது நாடாளுமன்ற பயணத்தில் களமிறங்கினார். சிபிஐ-எம் மூத்த தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை வென்று தனது முதல் அடியை எடுத்து வைத்தார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில், இவர் இளைஞர் காங்கிரசின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பாஜகவின் அசைக்கமுடியாத சக்தி : வங்கத்து பெண் புலி அரசியலுக்கு வந்த கதை | West Bengal Politics In Tamil

அவர் 1989 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் எதிர்ப்பு அலை காரணமாகத் தோல்வியடைந்தார். ஆனால் அதில் விரக்தியடையாமல், மேற்கு வங்க அரசியலில் தனது கவனத்தை செலுத்தினார்.

1991ஆம் ஆண்டு தேர்தலில் அவர் மீண்டும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு, அவர் வாழ்வில் பின்னடைவே இல்லை. அந்த ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், பி.வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் இளைஞர் நல மற்றும் விளையாட்டு அமைச்சின் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பூசலின் காரணமாக 1997-ம் ஆண்டு காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்டார் . 1998-ம் ஆண்டு அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கப்பட்ட அதே ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்று அம்மாநில மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு நேரடி எதிர்க்கட்சியாக உருவெடுத்தார்.

அரசியல் மம்தா

மேலும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு மாற்றாக இவரின் திரிணாமுல் காங்கிரஸ் விளங்கியது. அதன் பிறகு பல கூட்டணிகளுடன் இணைந்து இரண்டு முறை ரயில்வேத் துறை அமைச்சராகவும் ஒரு முறை மின்சாரத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். அந்த வேளையில் மேற்கு வங்கத்தில் நடந்து வந்த மார்க்சிஸ்ட் ஆட்சியில் பல்வேறு வன்முறைகள் நிகழ்ந்தன.

மக்கள் சொல்ல முடியாத துயரத்தை சந்தித்து வந்தனர். இதன் நடுவில்தான் 2011 சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை மிகசரியாக பயன்படுத்தி மம்தாவும் திரிணாமுல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதுவரை மார்க்சிஸ்ட் கட்சியின் மிகப்பெரும் கூடாரமாக விளங்கிய மேற்கு வங்கத்தில் அதைத் தகர்த்தெறிந்து முதல் முறையாக ஒரு பெண்ணாக உள்ளே உழைத்தார் மம்தா பானர்ஜி.

பாஜகவின் அசைக்கமுடியாத சக்தி : வங்கத்து பெண் புலி அரசியலுக்கு வந்த கதை | West Bengal Politics In Tamil

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க கட்சி தொடர்ந்து வெற்றிபெற்றது. ஆனால் மேற்கு வங்கத்தில் தற்போது வரை பா.ஜ.கவால் காலூன்ற முடியவில்லை. தமிழகத்தில் எப்படி ஜெயலலிதா தவிர்க்கமுடியாத ஆளுமையோ அதேபோல் தற்போது மேற்கு வங்கத்தில் மம்தா திகழ்கிறார். மாநிலத்தின் சில இடங்களில் யானை சிலை வைத்தது எதிர்கட்சிகளுக்கு தொல்லை கொடுத்தது என்று மம்தா மீது கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும் அரசியல் வாழ்வில் தன்னை எதிர்ப்பவர் எவ்வுளவு பெரிய சக்தியாக இருந்தாலும் அவர் எப்போது அஞ்சியதில்லை 15 வயதில் அரசியலை தொடங்கிய மம்தா பானர்ஜி இன்று மேற்கு வங்க அரசியலின் முக்கிய முகமாக திகழ்கின்றார் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை