இனி.. பள்ளி மதிய உணவில் சிக்கன் - அரசு அதிரடி!
மதிய உணவு திட்டத்தில் கூடுதலாக கோழிக்கறி மற்றும் பழங்களை வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிய உணவு
மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில அரசு அங்கு மத்திய உணவு திட்டத்தில் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
அதன்படி, தற்போது வழங்கப்படும் உணவுகளுடன் கூடுதலாக கோழிக்கறி மற்றும் பழங்களை ஜனவரி முதல் ஏப்ரல் வரை வாரம் தோறும் மத்திய உணவில் வழங்கப் போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிக்கன் சேர்ப்பு
இதற்காக கூடுதலாக ரூ.371 கோடி ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அங்கு மத்திய உணவு திட்டத்தின் கீழ் சுமார் 1.16 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனாளிகளாக உள்ளனர்.
தற்போது சாதம், பருப்பு, காய்கறி, சோயாபீனஸ், முட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன. ஆனால், ஏப்ரலுக்குப் பின் இந்த திட்டம் தொடருமா என்ற தகவல் வெளியாகவில்லை.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய உணவு திட்டத்துடன் சேர்த்து காலை உணவு திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.