தீராத விளையாட்டு பிள்ளையாக மாறிய இளைஞர் : ஒரே நேரத்தில் 4 பெண்களுடன் காதல் - கடைசியில் நடந்த ட்விஸ்ட்
மேற்கு வங்கத்தில் இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 4 பெண்களை காதலித்த சம்பவத்தில் திடீர் திருப்பம் நிகழ்ந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் பகுதி ஜோர்பத்கி கிராமத்தை சேர்ந்த சுபமோய் கர் என்ற இளைஞர் உள்ளூரில் உள்ள மருத்துக்கடையில் சேல்ஸ் மேனாக பணியாற்றி வந்துள்ளார். உள்ளூரில் நடந்த காளி பூஜை முடிந்து பணிக்கு செல்ல தனது வீட்டில் புறப்பட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த இளைஞரின் நான்கு பெண் தோழிகள் ஒன்றாக வந்துள்ளனர். இதனைக் கண்டு அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம் அந்த 4 பேரையும் சுபமோய் ஒரே நேரத்தில் காதலித்து ஏமாற்றியுள்ளார்.
தாங்கள் ஏமாற்றப்பட்டத்தை எப்படியோ அறிந்த 4 பெண்களும் அந்த இளைஞரை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என முடிவு செய்து ஒன்றாக சேர்ந்து அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத இளைஞர் அதிர்ச்சியில் உறைந்துபோக 5 பேருக்குள்ளும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய சுபமோய் கர் பெரிய பிரச்சினையில் முடிந்துவிடும் என விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதனையடுத்து அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அதேசமயம் அந்த இளைஞர் மீது இளம்பெண்கள் காவல்நிலையத்தில் புகார் எதும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.