மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு அடி! தூள் கிளப்பி வரும் திரிணாமூல் காங்கிரஸ்

மேற்கு வங்க சட்டப்போரவை தேர்தலில், மம்தா பேனர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்தியாவில் இன்று தமிழ்நாடு, புதுசேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

அதன் படி தமிழகத்தில் திமுக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசும், அசாமில் பாஜகவும் முன்னிலை வகித்து வருகிறது.

இருப்பினும் இந்த முறை மேற்கு வங்க தேர்தல் பாஜகவுக்கு ஒரு கெளரவ போட்டி போன்று ஆனது. மோடியா? மம்தா பேனர்ஜியா என்ற அளவிற்கு அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெற்றன.

 

அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின் படி, மேற்குவங்கத்தில், மம்தா பேனர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் 286 தொகுதிகளில், 167 இடங்களிலும் பாஜக 113 இடங்களையும், பிற கட்சிகள் 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் சுவேந்து அதிகாரி முன்னிலைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்