கலைக்கப்படும் மம்தா ஆட்சி? வெடிக்கும் போராட்டம் - டெல்லி விரைந்த ஆளுநர்!
மேற்கு வங்க ஆளுநர் சிவி ஆனந்த போஸ் டெல்லி சென்றுள்ளார்.
வெடிக்கும் போராட்டம்
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. மக்கள் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் அங்கே மம்தா அரசுக்கு எதிராகவும் திரும்பியுள்ளது.
இந்த கொலை குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 33 வயதான சஞ்சோய் ராய் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, நான் மட்டும்தான் குற்றத்தை தனியாக செய்தேன். நான்தான் குற்றவாளி. என்னை தூக்கில் போடுங்கள்.
ஆளுநர் சந்திப்பு
எனக்கு பிரச்சனை இல்லை, என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். முன்னதாக ராயின் மாமியார் தனது மகளை ராய் உடல் ரீதியாக துன்புறுத்தியதாக காளிகாட் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநர் சிவி ஆனந்த போஸ் டெல்லி சென்றுள்ளார்.
அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஜனாதிபதி திரெளபதி முர்மு ஆகியோரை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதற்குமுன், போஸ் சில பெண் மருத்துவர்களை ராஜ்பவனில் சந்தித்து, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.