வேரோடு பிடுங்கிய அரச மரத்திற்கு அடியில் அதிசய கிணறு - உள்ளே இருந்த ஆச்சரியம்!
அரச மரத்தை வேரோடு பிடுங்கிய போது, அதற்கு அடியில் பழமையான கிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அரச மரம்
கோவை அவினாசி ரோட்டில் உப்பிலி பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலத்தில் லட்சுமி மில் சிக்னல், பீளமேடு உள்ளிட்ட 4 இடங்களில் ஏறு தளம், இறங்கு தளம் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கட்டிடம் முன் இறங்கு தளம் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். அங்கு இறங்கு தளம் அமைக்க இடையூறாக காணப்பட்ட 65 ஆண்டுகள் பழமையான அரச மரம் மற்றும் 25 ஆண்டுகள் பழமையான சேவல் கொண்டை பூ மரம் ஆகிய 2 மரங்களை வேருடன் பிடுங்கி மறுநடவு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
பழமையான கிணறு
இதில், 12 அடி சுற்றளவிலிருந்த அரச மரத்தை வெட்டி அகற்றும் போது, அந்த மரத்திற்கு அடியில் பழமையான கிணறு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 40 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றின் குறுக்கே 2 ராட்சத இரும்பு கம்பிகள் இருந்தது.
இந்த கிணற்றின் ஓரம் வளர்ந்த அரச மரம், கிணற்றையே மூடிவிட்டது என்பது தெரிந்தது. இந்த கிணற்றில் தற்போது தண்ணீர் இருப்பதால் பலரும் கிணற்றை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும், வேருடன் பிடுங்கப்பட்ட அரச மரம் மற்றும் சேவல் கொண்டை பூ மரம் ஆகியவற்றை கோவை வ.உ.சி மைதானத்தில் மறு நடவு செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.