அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை வரவேற்க்கும் விதமாக பட்டாசு வெடித்து கொண்டாட முயன்றவர்கள் கைது
V. Senthil Balaji
DMK
Tamil Nadu Police
By Thahir
கரூரில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது வரவேற்கும் வகையில் பட்டாசு வெடித்துக் கொண்டாட வந்தவர்கள் கைது செய்யபட்டனர்.
கரூரில் பரபரப்பு
கரூர் பேருந்து நிலையம் அருகே அகில இந்திய சட்ட உரிமை கழகம் அமைப்பை சேர்ந்தவர்கள் மின்சாரம் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்ததை வரவேற்று அந்த அமைப்பை சேர்ந்த நபர்கள் பட்டாசு வெடிக்க வந்தனர்.
அப்போது காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவர்களை 3 நபர்களை கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் தேனி மாவட்ட பகுதியில் இருந்து வந்தவர்கள் என கூறப்படுகிறது.
இதனால் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.