சசிகலாவின் வருகை மிகப்பெரிய எழுச்சி - பொன்.ராதாகிருஷ்ணன்
சசிகலாவின் வருகை மிகப்பெரிய எழுச்சியாக இருக்கும் என புதுச்சேரி முதல்வர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சசிகலா அவர்கள் கடந்த மாதம் 27ம் தேதி சொத்துகுவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனை நிறைவுப்பெற்று விடுதலையானார். அதனையடுத்து அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவுக்கு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்த நிலையில் பெங்களூருவிலிருந்து திரும்பிய சசிகலாவிற்கு அளிக்கப்பட்ட வரவேற்பை மிகப்பெரிய எழுச்சியாக கருதுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதாகவும், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் தெரிவித்தார். மேலும், அதிமுக அரசின் திட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு யாரோ முன் கூட்டியே தெரிவித்து விடுவதாக அவர் எச்சரித்தார்.