சசிகலாவின் முடிவை வரவேற்கிறேன்: பாஜக தலைவர் எல்.முருகன்
sasikala
bjp
murgan
By Jon
சசிகலா அரசியலில் இருந்து விலகும் முடிவை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், சசிகலா அறிக்கையில் தெரிவித்துள்ளதை அரசியல் ரீதியாக வரவேற்க வேண்டும். நம்முடைய பொது எதிரி, தீயசக்தி திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்திட நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.
அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று, அவருடைய விருப்பங்களையும் தெரிவித்திருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
மேலும் சசிகலாவில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி எப்படியாவது ஆட்சியை பிடிக்கலாம் என கனவு கண்டவர்களுக்க அவரது இந்த முடிவு ஏமாற்றம் தான் எனவும் தெரிவித்துள்ளார்.