ஐபிஎல் போட்டியை நேரில் காண அனுமதி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

IPL2021 CSKvsMI
By Petchi Avudaiappan Sep 15, 2021 11:46 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட நடப்பாண்டின் ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற உள்ளது.

அதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் ஆயத்தமாகி வரும் நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றூ வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் நடைபெற்ற ஆட்டங்களுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது அமீரகத்தில் நடக்கும் போட்டிகளில் அனுமதிக்கப்பட உள்ளனர்.