இப்படியெல்லாமா ஹோட்டல்ஸ் இருக்கும் - ஆச்சர்யம் ஆனால் உண்மை!

Dubai United States of America Thailand Philippines
By Sumathi Nov 02, 2023 07:13 AM GMT
Report

தனித்துவமான மற்றும் வித்தியாசமான சில உணவு விடுதிகளை பற்றி பார்ப்போம்.

அமெரிக்கா, ஹார்ட் அட்டாக் கிரில்

அமெரிக்கா, ஹார்ட் அட்டாக் கிரில்: இந்த உணவகம் "இறப்பிற்கு மதிப்புள்ளது" என தனித்துவ டேக்லைனை கொண்டுள்ளது. மருத்துவமனையை கருப்பொருளாக கொண்டுள்ளது. ஊழியர்கள் அனைவரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போல் உடையணிந்து உணவு பரிமாறுகின்றனர்.

துபாய், சில்அவுட் ஐஸ் லவுஞ்ச்

துபாய், சில்அவுட் ஐஸ் லவுஞ்ச்: இந்த உணவகத்தில் பானங்கள் முதல் உணவுகள் வரை, அனைத்தும் பனியில் வழங்கப்படுகின்றன. இங்கு வெப்பநிலை ஆறு டிகிரிக்குக் குறைவாக உள்ளது.

பிலிப்பைன்ஸ், லபாசின் நீர்வீழ்ச்சி உணவகம்

பிலிப்பைன்ஸ், லபாசின் நீர்வீழ்ச்சி உணவகம்: இந்த உணவகம் மதிய உணவை மட்டுமே வழங்குகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமைந்துள்ளது.

தாய்லாந்து, தி குரோட்டோ, ராயவடி

தாய்லாந்து, தி குரோட்டோ, ராயவடி: இந்த உணவகம் ஃபிரானாங் கடற்கரையில் ஒரு சுண்ணாம்பு குகையில் அமைந்துள்ளது. உட்புறம் ஆடம்பரமான ரொமான்டிக் உணவகம் உள்ளது.

ரங்காலி தீவு ரிசார்ட்

மாலத்தீவுகள்: ரங்காலி தீவு ரிசார்ட்டில் கடல் மட்டத்திலிருந்து 16 அடிக்கு கீழே உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. உணவகத்தின் தெளிவான கண்ணாடி சுவர்கள் வழியாக மில்லியன் கணக்கான மீன்களை பார்க்கலாம்.

இங்கிலாந்தில் வீராசாமி உணவகம் - முடிசூட்டு விழாவில் கவன ஈர்ப்பு!

இங்கிலாந்தில் வீராசாமி உணவகம் - முடிசூட்டு விழாவில் கவன ஈர்ப்பு!