தொங்கும் தொப்பைக்கு குட் பை சொல்லணுமா? இந்த 3 மூலிகை போதும்
பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பான விடயம் தான்.
ஆனால் தற்காலத்தில் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்தப்படி மணிக்கணக்கில் வேலைபார்ப்பது, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, போதிய உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால், இளம் வயதிலேயே தொப்பை மற்றும் உடல் பருமன் அதிகரிக்க ஆரம்பித்துவிடுகின்றது.
அதனால் தொப்பை குறைக்க உடற்பயிற்சி செய்யவும் நேரமின்றி, விரைவில் தொப்பையை குறைக்க சந்தைகளில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் முயற்சித்து நேரத்தையும், பணத்தையும் இழந்தது மட்டுமன்றி பல்வேறு பாதகமாக ஆரோக்கிய பிரச்சினைகளையும் ஏற்படுத்திக்கொள்கின்றார்கள்.
அதிக செலவின்றி விரைவில் தொங்கும் தொப்பையை இருந்த இடம் தெரியாமலாக்கி கட்டுக்கோப்பான உடலமைப்பை பெறுவதற்கு ஹெர்பல் டீக்கள் எவ்வாறு சிறப்பாக பங்காற்றுகின்றது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த கொழுப்பை குறைக்க ஹெர்பல் டீக்கள் (Herbal Teas) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை மெட்டாபாலிசத்தை அதிகரிப்பதுடன் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, வயிற்று கொழுப்பை வேகமாக கரைப்பதில் வினைத்திறன் மிக்கவை என அறிவியல் ரீதியில் நீரூபிக்கப்பட்டுள்ளது.
கிரீன் டீ (Green Tea)
காபி, டீயை விட குறைந்த அளவு காஃபைன் கொண்டது க்ரீன் டீ. இந்த க்ரீன் டீயில் உள்ள சில குறிப்பிட்ட வகை ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதில் காணப்படும் கேடெச்சின்கள் (Catechins) என்பது மெட்டாபாலிசத்தை 4-5% அதிகரித்து,கொழுப்பை எரிக்கும் செயல்முறையை விரைவாக்குவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைக்கின்றது.
1 கப் சூடான நீரில் கிரீன் டீ இலைகளை 3-5 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர், தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதால், உடலில் இருந்து நச்சுகள் வெளியேறுவதுடன் தொப்பை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கொடுக்கும்.
கிரீன் டீ யை இரவு உணவுக்கு பிறகு 30-60 நிமிடங்களுக்குள் குடிப்பது சிறந்த பலனை கொடுக்கும்.
புதினா தேநீர் (Pudina Tea)
புதினா டீ இயற்கையாகவே காபின் இல்லாத மூலிகை தேநீர். இது புத்துணர்ச்சியூட்டும் தேநீராக இருக்கிறது.
இரவு நேரங்களில் தூக்க பிரச்சனைகள் மற்றும் பதட்டம் மற்றும் படபடப்பு போன்ற பிரச்சனைகளுக்கு புதினா டீ சிறந்த தெரிவாக இருக்கின்றது.
இது செரிமானத்தை மேம்படுத்தி வயிற்று உப்புசத்தை குறைக்கும். மெட்டாபாலிசத்தை அதிகரித்து, வயிற்று கொழுப்பை கரைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
சீமை சாமந்தி (Chamomile Tea)
என்றும் இளமையுடன் இருக்க விரும்பினால் இந்த சீமை சாமந்தி பூக்களை கொண்டு டீ செய்து குடிக்கலாம். இதனுடன் வயிறு சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் இது துணைப்புரியும்
இந்த சீமை சாமந்தி டீ மன அழுத்தத்தையும் குறைத்து நல்ல தூக்கத்தை கொடுக்கும். மேலும் மெட்டாபாலிசம் அளவை சீராக்க வைத்து உடல் எடையை பராமரிப்பதில் வினைத்திறனுடன் செயல்படுகின்றது.
1 கப் வெந்நீரில் சீமை சாமந்தி பூக்களை 5 நிமிடம் ஊறவைக்கவும். தூங்குவதற்கு 30-40 நிமிடங்களுக்கு முன்னர் குடிப்பது சிறந்த பலனை கொடுக்கும்.