உடல் எடையை கிடுகிடுவென குறைக்கும் கொள்ளு துவையல் - சுவையாக செய்வது எப்படி? இதோ...

Weight Loss
By Nandhini Sep 01, 2022 11:04 AM GMT
Report

உடல் எடையை கிடுகிடுவென குறைக்கும் கொள்ளு துவையல் சுவையாக செய்வது செய்வது என்று பார்ப்போம்.

உடல் பருமன்

இன்றைய காலத்தில் தன் உடல் தோற்றத்தின் மீது பலருக்கு அக்கறையே கிடையாது. கட்டுப்பாடு இல்லாத உணவு பழக்கங்களால் உடை எடை அதிகரித்து காற்றடித்த பலூனை போல் மாறி விடுகின்றனர்.

உடல் எடை குறையவும், அதிகரிக்காமல் இருக்கவும் உண்ணும் உணவில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துவது அவசியமோ அதே போல உடல் உழைப்பிலும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்துவது என்பது மிகவும் முக்கியம். உடல் எடையை குறைப்பது மிகவும் சவாலான பணிதான்.

இன்றைய மக்கள் உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள். ஆனால், அதற்கான பலன்தான் அவர்களுக்கு கிடைப்பது கிடையாது.

ஜிம்மில் மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்வதிலிருந்து பட்டினி கிடப்பது மற்றும் ஃபாஸ்ட் டயட்களைப் பின்பற்றுவது வரை, நாம் உடல் நிலையில் இருக்க தொடர்ந்து முயற்சி செய்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, வடிவத்தில் இருப்பது உடல் மற்றும் மனதைப் பற்றியது மட்டுமல்ல, தன்னம்பிக்கையை அதிகரிப்பதும் ஆகும்.

கவலை வேண்டாம்... உடல் எடையை குறைக்கும் கொள்ளு துவையல் எப்படி செய்வது என்று பார்ப்போம் -

தேவையான பொருட்கள்

கொள்ளு - அரை கப்

மிளகாய் வத்தல் - 6

உளுந்து - 4 டீஸ்பூன்

எண்ணெய் - 4 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - 4

டீஸ்பூன் புளி - சிறு துண்டு

பூண்டு - 4 பல்

தேவையான உப்பு

செய்முறை:

ஒரு வாணலியில் அரை கப் கொள்ளை எடுத்து வாசனை வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

அதே கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வத்தல், உளுந்து இரண்டையும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மிக்ஸியில் வறுத்த மிளகாய், உளுந்து, கொள்ளு, தேங்காய் துருவல், சிறு துண்டு புளி, உப்பு, தேவையான தண்ணீர் விட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சூப்பரான கொள்ளு துவையல் ரெடி.

இந்த கொள்ளு துவையலை வாரம் 2 அல்லது 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.