மணமகன்களின் உயிரை குடிக்கும் திருமண இசைநிகழ்ச்சி : ஆய்வில் வெளியான பகீர் தகவல்

Wedding Crime
By Irumporai Mar 07, 2023 06:58 AM GMT
Report

மாரடைப்பு , பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள் 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது .

மாரடைப்பு தொடர்பான ஆய்வு

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமணத்தின்போது அங்கு நடந்த இசை நிகழ்ச்சியில் அதிக சத்தம் வந்ததால் மணமேடையில் மணமகன் மயங்கி விழுந்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதே போன்று ஒரு சம்பவம் வாரணாசியிலும் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 திருமண இசை நிகழ்ச்சி

இந்த நிலையில் திருமண நிகழ்ச்சியில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி தொடர்பாக ஐரோப்பிய மருத்துவ இதழ் கடந்த 2019 - ஆம் ஆண்டு நவம்பரில் ஆய்வினை தொடங்கியது. அதில் 500 ஆரோக்கியமான பெரியவர்களிடம் நடத்தப்பட்ட அதிக சத்தத்துடன் கூடிய இசை ஒரு நபரை பலவீனமாக மாற்றும் என கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக 24 மணி நேர இரைச்சல் அளவில் ஒவ்வொரு 5 டெசிபல் அதிகரிப்பது இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

மணமகன்களின் உயிரை குடிக்கும் திருமண இசைநிகழ்ச்சி : ஆய்வில் வெளியான பகீர் தகவல் | Weddings Music Increases Risk Of Heart Attack

ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இதனால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள் 34 சதவீதம் அதிகரிப்பதை கண்டறிந்துள்ளனர். இதுபோன்ற ஆய்வு ஜெர்மனியில் உள்ள மைன்ஸ் பல்கலைக்கழக மருத்துவ மையத்திலும் நடத்தப்பட்டது. 35 முதல் 74 வயதிற்குட்பட்ட 15 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அதிக சத்தத்துடன் இசையை கேட்கும் போது இதயத்துடிப்பு வேகமாக அதிகரிக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர்

கடந்த சில நாட்களாக திருமணத்தின் போது ஏற்படும் இசை நிகழ்ச்சிகளால் மரணங்கள் அதிகரிக்கும் நிலையில் தற்போது இந்த ஆய்வறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.