நடுவானில் திருமணம் செய்த ஜோடி; பிரம்மாண்ட அலங்காரம் - வைரலாகும் வீடியோ
விமானத்தில் நடந்த திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடுவானில் திருமணம்
விமான ஆர்வலரும் பிரபல இன்ப்ளூயன்சருமான சாம் சூய் விமானத்தில் திருமணம் செய்து கவனம் ஈர்த்துள்ளார். போயிங் 747 விமானத்தில் நடந்த இந்த திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், திருமண உடையில் மணமக்கள் விமானம் ஏறும் இடத்திற்கு வருகின்றனர். அங்கு விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தில் மணமக்கள் இருவரும் கைகோர்த்தபடி நடந்து வந்தனர்.
வைரல் வீடியோ
பின் விமானத்தில் ஏறிய மணமக்கள் உள்ளே தங்களது விருந்தினர்களுடன் திருமணத்தை கொண்டாடினர். விமானத்தின் உட்புறம் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட ஒரு ஆடம்பர நட்சத்திர ஹோட்டலாக மாறியுள்ளது.
இந்த திருமணத்தில் மணமக்கள் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இதனை வீடியோவாக எடுத்து "காற்றில் காதல் உள்ளது" என்ற கேப்ஷனுடன் பியோனா & சாம் என்ற ஜோடி சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்துள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள புஜைரா சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்த ஜோடி புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.