பண்ணை வீடு..பசுமை விருந்து..வைரலாகும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண Invitation
நடிகர் அசோக் செல்வன் - நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அவர்களது திருமண invitation இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அசோக் செல்வன் திருமணம்
தமிழ் திரையுலகில் இளம் நடிகர்களில் மிகவும் கவனம் பெறுபவராக அசோக் செல்வன் இருந்து வருகின்றார். தெகிடி, ஓ மை காதல், போர் தொழில் என சிறப்பான படங்களில் நடித்து வரும் அசோக் செல்வன், தற்போது நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த படத்தில் அவருடன் இணைத்து நடித்து வரும் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் அசோக் செல்வனுக்கும் காதல் மலரவே இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெறும் இந்த திருமண தொடர்பாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருகின்றன.
Wedding Invitation
இந்நிலையில், தற்போது இவர்களின் திருமண invitation இணையத்தில் வைரலாகி வருகின்றது. வரும் செப்டம்பர் 13-ந் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இட்டேரி என்ற கிராமத்தில் இருக்கும் கீர்த்தி பாண்டியனின் தந்தை அருண் பாண்டியனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் பசுமை விருந்து பரிமாறப்படும் என்றும் திருமண invitation'இல் குறிப்பிடப்பட்டு உள்ளது.