இணையதளத்தில் வைரலாகும் 1933ம் ஆண்டு பழைய திருமண அழைப்பிதழ்.!
1933ம் ஆண்டு உருது மொழியில் பழைய திருமண அழைப்பிதழ் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகும் பழைய திருமண அழைப்பிதழ்
டுவிட்டரில் சோனல் பாட்லா என்ற நபர் தன்னுடைய தாத்தா-பாட்டியின் அழைப்பிதழின் படத்தை வெளியிட்டு, அதில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், சுமார் 1933ம் ஆண்டு டெல்லியில் என் தாத்தா பாட்டியின் திருமண அழைப்பிதழ் என்று பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில், உருது மொழியில் எழுதப்பட்ட உரையுடன் காபி நிற அட்டை இடம்பெற்றுள்ளது. அந்த அட்டையில், "நான் முஹம்மது நபியைப் பாராட்டுகிறேன், நன்றி கூறுகிறேன். மதிப்பிற்குரிய ஐயா, உங்கள் மீது அமைதி உண்டாகட்டும், இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நேரத்திற்காக நான் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகிறேன். எனது மகன் ஹபீஸ் முஹம்மது யூசுப்பின் திருமணம் 23 ஏப்ரல் 1933/27 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. ஜில்-ஹஜ் 1351 அன்று ஞாயிற்றுக்கிழமை என்று அச்சிடப்பட்டுள்ளது.

நெட்டிசன்கள் வியப்பு
1933ம் ஆண்டு பழைய திருமண அழைப்பிதழ் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த திருமண அழைப்பிதழ் நெட்டிசன்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த அழைப்பிதழைப் பார்த்த நெட்டிசன்கள், "இந்த வரலாற்றின் பகுதியை தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்தது ஆச்சரியமாக இருக்கிறது என்றும், மிக அழகாக எழுதப்பட்டுள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
My grandparents’ wedding invitation circa #1933 #Delhi pic.twitter.com/WRcHQQULUX
— Sonya Battla (@SonyaBattla2) December 30, 2022