நயன்தாராவுக்கு உதயநிதி கொடுத்த கல்யாண பரிசு - உண்மையை சொன்ன விக்னேஷ்..!

Udhayanidhi Stalin Nayanthara M. K. Stalin Vignesh Shivan 44th Chess Olympiad
By Thahir Aug 01, 2022 10:04 AM GMT
Report
225 Shares

உதயநிதி கொடுத்த வாய்ப்பு குறித்து இயக்குநரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

விக்னேஷ் சிவனை பாராட்டும் பிரபலங்கள் 

கடந்த 28 ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான கலை நிகழ்ச்சிகளை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கினார். இதில் தமிழ் பாரம்பரியம் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை நிகழ்ச்சிகளாக 3 நேரம் நேரலை செய்யப்பட்டது.

44th Chess Olympiad

இந்த கலை நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை நடத்திக் கொடுத்தது குறித்து பேசியுள்ளார்.

விக்னேஷை அழைத்த உதயநிதி

செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி கொடுக்கும் வாய்பை பெற்றது பெருமையாக இருப்பதாக தெரிவித்தார். காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பார்த்து பிடித்ததால் உதயநிதி அண்ணா அழைத்து பேசினார்கள்.

அப்போது தான் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை நடத்துவது குறித்து கேட்டார்கள். இதுதொடர்பாக ஒரு மீட்டிங் நடைபெற்றது.

Nayanthara

அந்த மீட்டிங்கில் பங்கேற்றேன். அப்போது நேப்பியார் பாலத்திற்கு செஸ் போர்டு போல் பெய்ண்ட்டிங் அடிக்க வேண்டும் என்பது போன்ற சில ஐடியாக்களை கூறினேன்.

இதனை பெரிய ஈவன்ட்டாக நடத்த வேண்டும் என்று உதய் அண்ணாதான் கூறினார்கள். திருமண அழைப்பிதழ் கொடுத்தபோது, இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக நன்றி கூறினேன்.

முதல்வர் நடிப்பது எளிதாக இருந்தது

வெல்கம் ஆந்தம்மில் முதல்வர் ஸ்டாலினை நடிக்க வைப்பது எளிமையாக இருந்தது. சராசரி மனிதரிடம் பேசுவது போல் அவரிடம் பேச முடிந்தது.

M K Stalin

அரசின் அதிகாரத்தால் நேப்பியார் பாலத்தில் உடனடியாக பெய்ண்டிங் பண்ண முடிந்தது. 3 மணி நேரத்தில் முதல்வரை வெல்கம் ஆந்தத்தில் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம்.

விஸ்வநாதன் ஆனந்தும் மற்றும் பிரக்ஞானந்தும் ஸ்பெயினில் இருந்ததால் அவர்களால் அப்போது வர முடியவில்லை, ஆனால் மெயின் வீடியோவில் அவர்களின் வீடியோவை சேர்த்துவிட்டோம்.

முதல்வரை வைத்து ஷூட் செய்தது எக்ஸைட்டிங்காக இருந்தது. 3 மணி நேரம் கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களை எண்டெய்டெய்ன் செய்ய வேண்டும்.

அது எல்லாருக்கும் புரிய வேண்டும் என்பதால் பேச்சை குறைத்து கொண்டு விஷ்வாலாக கொடுத்தோம். தலைமை செயலாளர் இறையன்பிடம் ஸ்க்ரிப்ட்டை காட்டினோம்.தமிழ்நாட்டை பற்றிய அந்த ஸ்க்ரிப்ட் 45 நிமிடம் வந்தது. பின்னர் அதனை சுறுக்கி 15 நிமிடம் மாற்றினோம் என்றார்.

அவரின் இந்த பேட்டியை கேட்ட ரசிகர்கள் பலரும் நயன்தாராவுக்கு உதயநிதி கல்யாண பரிசாக விக்னேஷ் சிவனுக்கு இந்த வாய்ப்பை கொடுத்துள்ளார் என பேசப்பட்டு வருகிறது.