கல்யாண பரிசாக வந்த ஹோம் தியேட்டர்; வெடித்து மாப்பிள்ளை பலி - காதலன் ஸ்கெட்ச்

Attempted Murder Crime
By Sumathi Apr 05, 2023 06:08 AM GMT
Report

திருமண பரிசாக வந்த ஹோம் தியேட்டர் வெடித்து சிதறியதில் புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ளார்.

திருமண பரிசு

சத்தீஷ்கர், ஷமாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமேந்திர மேராவி (22). இவருக்கு 2 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது பல பரிசு பெருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை, ஹேமேந்திர மேராவியும் அவரது சகோதரரான ராஜ்குமார் என்பவரும் பிரித்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.

கல்யாண பரிசாக வந்த ஹோம் தியேட்டர்; வெடித்து மாப்பிள்ளை பலி - காதலன் ஸ்கெட்ச் | Wedding Gift Explodes Man Died Chattisgarh

அப்போது, ஹோம் தியேட்டர் ஒன்றும் திருமண கிஃப்ட் ஆக வந்திருந்ததை பார்த்தவர்கள் அதனை பிரித்து பார்த்து பரிசோதித்துள்ளனர். அதில் ஹோம் தியேட்டர் வெடித்து சிதறி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் புது மாப்பிள்ளை உயிரிழந்தார்.

மாப்பிள்ளை பலி

படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சகோதரரும் உயிரிழந்தார். மேலும், வீட்டில் 4 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீஸார் விசாரித்ததில், ஹோம் தியேட்டருக்குள் வெடிகுண்டு வைத்து சதி செயல் நடந்துள்ளது தெரியவந்தது.

அதன்பின் தடவியல் நிபுணர்களுடன் விசாரித்ததில் மணப்பெண்ணின் முன்னாள் காதலனான சர்ஜூ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.