லெக் பீஸ் எங்க..? கல்யாண விழாவில் களேபரம்; களத்தில் மாப்பிள்ளை - வைரல் Video!
பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் வாலிபரகள் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெக் பீஸ்
உத்திர பிரதேச மாநிலம் பரேலி நகரில் நேற்று முன்தினம் திருமண விழா ஒன்று நடைபெற்றது. அப்போது மணமகன் வீட்டாருக்கு வழங்கப்பட்ட விருந்தில் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது.
ஆனால், அதில் சிலருக்கு லெக்பீஸ் கிடைக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் சிலர் அதனை பிரச்சனையாகி, ரகளை செய்துள்ளனர். முதலில் வாக்குவாதமாக தொடங்கிய பிரச்சனை, ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறி களேபரமானது.
பறந்த நாற்காலி
இந்த சண்டையில் மாப்பிள்ளையும் களமிறங்கி தனது தரப்பினருக்காக சண்டையிட்டுள்ளார். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் பலருக்கும் சரமாரியான அடி, உதவி விழுந்தது.
அங்கிருந்த நாற்காலிகளும் பறந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. ஆனால், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.