உலகம் முழுவதும் முடங்கிய இணையதளங்கள்... காரணம் என்ன?
இன்று உலகமெங்கும் பல்வேறு இணையதளங்கள் முடங்கின. ஏதேனும் மர்ம கும்பல சைபர் தாக்குதல் நடத்தினார்களா? என்பது குறித்து நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்திய நேரப்படி சுமார் மூன்று மணியளவில் உலகமெங்கும் உள்ள முக்கிய இணையதளங்கள் வேலைசெய்யவில்லை, குறிப்பாக செய்தி இணையதளங்களான சிஎன்என், தி கார்டியன், தி நியூயார்க் டைம்ஸ், தி பினான்ஷியல் டைம்ஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி தளங்கள் முடங்கின.
இங்கிலாந்து அரசின் முக்கிய இணையதளங்களும் பாதிக்கப்பட்டன.
இந்த இணையதளங்களை பயனர்களை மீண்டும் அணுகும் போதுError 503 Service Unavailable' என்றே வந்தது. ஒரு இணையதளத்தில் ஏற்பட்டது.

சர்வரில் ஏற்பட்ட கோளாறேஇதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் Fastly என்ற அமெரிக்க நிறுவனத்தின் சர்வர்களில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையால் இந்த தளங்கள் செயலிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கு பின்னணியில் திட்டமிடப்பட்ட சைபர் தாக்குதல் எதுவும் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.