அழகிய பனி ராட்சத கிரகத்தின் புதிய வெளிச்சத்தை பூமிக்கு அனுப்பிய ‘ஜேம்ஸ் வெப்’ - விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
அழகிய பனி ராட்சத கிரகத்தின் புதிய வெளிச்சத்தின் புதிய படத்தை ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி பூமிக்கு அனுப்பியுள்ளதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜேம்ஸ் வெப்
ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக தொலைநோக்கி ஒன்றை நாசா உருவாக்கி இருக்கிறது. இந்த தொலைநோக்கிற்கு 'ஜேம்ஸ் வெப்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. மொத்தமாக 5 ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் இந்த தொலைநோக்கி ஏவப்பட்டது. இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
வியாழனின் புதிய புகைப்படங்கள்
சமீபத்தில் ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி வியாழனின் புதிய படங்களை கைப்பற்றியது. அது வியாழனின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களுக்கு மேலே உயரமான உயரத்திற்கு செல்லும்போது, புலப்படும் அரோராக்களைக் கொண்டிருந்தது.

பனி ராட்சத கிரகத்தின் புதிய வெளிச்சம்
இந்நிலையில், வெப் நெப்டியூனின் முதல் படத்தை ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி பூமிக்கு அனுப்பியுள்ளது.
இந்த புகைப்படத்தில் பனி ராட்சத கிரகத்தை ஒரு புதிய வெளிச்சத்தில் வெளிப்படுத்துகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விசித்திரமான கிரகத்தின் வளையங்களின் தெளிவாக இதில் பார்க்க முடிகிறது.
தற்போது இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

1/ Webb turns its eye close to home by capturing its first image of Neptune, revealing the ice giant planet in a whole new light. This is the clearest view of this peculiar planet’s rings in more than 30 years. Read more:https://t.co/7HzZ5q5Pxh pic.twitter.com/Fb1EC9au3m
— ESA Webb Telescope (@ESA_Webb) September 21, 2022