அடுத்த 3 நாட்கள் வானிலை எப்படி?....தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி

Tamil nadu TN Weather Weather
By Karthick Aug 14, 2023 10:10 AM GMT
Report

 கடந்த சில நாட்களாக சென்னையில் திடீரென மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.   

சென்னையில் மழை 

சில தினங்களாக மாலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென மழை பெய்து வருகிறது. மாலை வேளையில் மழை பெய்தாலும், பகல் நேரங்களில் பெரும்பாலும் வெயிலே வாட்டி வருகிறது.

பாலச்சந்திரன் பேட்டி  

இந்நிலையில், இது குறித்து தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஜமீன் கொரட்டூரில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது.

weather-update-for-chennai

வெப்பநிலையை பொறுத்தவரையில், அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 39.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும். சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என கூறினார்.