#IndvsPak...இன்றாவது போட்டி நடக்குமா..?வானிலை அறிக்கை என்ன..?
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நேற்று மீண்டும் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் இன்றைய நாளிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் போட்டி
நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை தொடரில் சூப்பர் 4 லீக் சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மழை குறுக்கிட்டு போட்டியை நடத்திவிடாமல் தடுத்துள்ளது. முதல் போட்டியின் போது முதல் இன்னிங்ஸ் மட்டும் நடந்த நிலையில், நேற்று மீண்டும் reserve day ஆட்டம் நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இவர்கள் இருவரும் அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
வானிலை அறிக்கை என்ன..?
ரோகித் சர்மா 56 ரன்களும், சுப்மன் கில் 58 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 24.1 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், திடீரென மழை பெய்ய தொடங்கியது.
தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால், ஆட்டம் இன்றைய நாளிற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், போட்டி நடைபெறும் கொழும்புவில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 3 மணிக்கு இன்று போட்டி துவங்கவிருக்கும் நிலையில், போட்டி தொடங்கி இரண்டு மணி நேரம் அதாவது 5 மணி வாக்கில் இருந்து அங்கு கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.