செல்ல மழையே .. முத்து மழையே ..மூக்கின் மேலே மூக்குத்தியாகு: 3 நாட்களுக்கு கனமழை தொடரும் வானிலை மையம் அறிவிப்பு
By Irumporai
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று நாளையும், மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தேனி, திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் வங்கக்கடலில் ஆந்திர, ஒடிசா கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.