மாஸ்க் இல்லையென்றால் ரூ.1000 அபராதம்- நடைமுறைக்கு வந்த புதிய சட்டம்: எங்கு தெரியுமா?

police public mask wearing telengana
By Jon Apr 09, 2021 10:29 AM GMT
Report

தெலங்கானாவில் பொது இடங்களுக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் 1,000 ருபாய் அபராதம் விதிக்க அம்மாநில முதல்வர் சந்திரசேகர்ராவ் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவிவருகிறது. இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது பிரதமர் மோடி, நாட்டில் சவாலான சூழ்நிலை மீண்டும் உருவாகி வருகிறது என்றும் கொரோனா பரவலின் இரண்டாவது அலையை நாம் எதிர்த்து போராட வேண்டும் என மாநில அரசுகளை கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் தெலங்கானாவில் வீடுகளை விட்டு பொது இடங்களுக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் 1,000 ருபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த உத்தர்வை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். மேலும் 45 வயதைத் தாண்டிய அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் சந்திர சேகர் ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.