சென்னையில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் - சென்னை மாநகராட்சி
நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவிவருகிறது. இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
அப்போது பிரதமர் மோடி, நாட்டில் சவாலான சூழ்நிலை மீண்டும் உருவாகி வருகிறது என்றும் கொரோனா பரவலின் இரண்டாவது அலையை நாம் எதிர்த்து போராட வேண்டும் என மாநில அரசுகளை கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் தற்போது தமிழக அரசு சென்னையில் அபராதம் விதிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
அதன்படி மாஸ்க்கை முழுமையாக அணியாவிட்டால் ரூ 200 எனவும், பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதே போல் வணிக வளாகங்கள் சலூன்கள்,ஜிம் உள்ளிட்ட இடங்களில் அரசு விதிகளை பின்பற்றாவிட்டால் ரூ 5,000 அபராதம் என கூறப்பட்டுள்ளது.
அதே போல் சென்னையில் கொரோனா விதிகளை மீறுவேரிடம் இருந்து அபராதம் விதிக்க மண்டலம் வாரியாக இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது.