முகக்கவசம் அணிவதை தவிர வேறு வழிகிடையாது... சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை ஏறுமுகமாக உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் தயார்படுத்தப்பட்டு வரும் கோவிட் கேர் மையத்தை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
லேசான மற்றும் அறிகுறி இல்லாதவர்களுக்கு விக்டோரியா கோவிட் கேர் மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் என கூறினார். தற்போதுதமிழ்நாட்டில் 11 பேருக்கு பிரிட்டன் கொரோனாவும், ஒருவருக்கு தென்னாப்பிரிக்க கொரோனாவும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கொரோனாவில் இருந்து மீள்வதற்கு முகக்கவசம் அணிவதை தவிர வேறு வழியில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தடுப்பூசி போட்டவர்களில் ஒரு சிலருக்கு தொற்று மீண்டும் வருகிறது. ஆனால், அது தீவிரமாக இருப்பதில்லை எனவும்கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளும்போது எதிர்ப்பு சக்தி 70% முதல் 80% அதிகரிக்கும் என்றார்.